தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தடை உத்தரவு 2025 மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மீறி விற்பனை செய்தால் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமன்றி ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.