செய்தியாளர்களிடம் பேசிய வி.கே சசிகலா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை ஆய்வு பண்ணினால் தான் தெரியுமா ? எங்க பாத்தாலும் கொலை,  கொள்ளை,  நடந்துகிட்டு இருக்கு. சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குன்னு ஆய்வு பண்ணி தெரிஞ்க்க  வேண்டிய அவசியத்துல திமுக அரசாங்கம் உள்ளது. எங்க பார்த்தாலும் தவறு நடக்குது . அது மட்டும் இல்ல அவங்க கவுன்சிலர் ஆகட்டும், ஒன்றிய செயலாளர் ஆகட்டும்,  கட்சி பொறுப்புல இருக்குறவங்களாகட்டும் அவங்க வைக்கிறதுதான் அந்த ஊர்ல சட்டம்.

போலீஸ் அதற்கெல்லாம் வேலையே இல்லை.  அது மாதிரி தான் அவங்க நடத்திட்டு இருக்காங்க,  காரணம் என்ன ? இனிமே தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருக்கணும். தேர்தல் யுக்தியை டிவில சொல்ல முடியுமா ? நீங்க என்னுடைய அனுபவத்தை நீங்க போக போக தானா தெரிஞ்சிப்பீங்க,  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். நிச்சயமா அனைவரும் ஒன்றினைவார்கள். என்னை  பொருத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவ அத்தனை பேரும்….  அத்தனை தொண்டர்களும்….  எல்லாருக்கும்முகவரி கொடுத்தது இந்த இயக்கம்.

அதனால இந்த இயக்கத்தில் இருக்கிறதா தான் நான் எல்லாரையும் நினைத்துக்கொள்கிறேன். எனக்கு பயமே கிடையாது. சுத்தமா பயம் கிடையாது. இன்னொன்னு சொல்றேன்….  மக்கள பத்தி மட்டும் தான் நான் பார்ப்பேன். எங்க பார்ட்டிகாரங்களாக இருந்தாலும் சரி,  தப்புன்னா தப்புதான்.  திமுக மாதிரி கிடையாது நாங்க…  நீங்க அம்மா காலத்திலே  பார்த்து இருப்பீங்க அதனால எங்களுக்குன்னு ஒரு வழி இருக்கு. எங்க ரெண்டு தலைவர் சொல்லிக் கொடுத்த வழி. நிச்சயம் இந்த இயக்கம் நல்லா வரும். எப்போதுமே இந்த இயக்கத்தில் சின்ன பிரச்சனை இருக்கும்.

ஒரு தலைவர் மறைந்த உடனே ஒரு பிரச்சனை வரும். அந்த பிரச்சனை அப்படியே இருந்தது இல்லை.  திருப்பி சேந்துரும்…   அதனால இது இரண்டாவது நடந்திருக்கு. முதல் முறை சரி பண்ணது நான் தான். முதல் முறை சரி பண்ணும்போது எனக்கு வயசு என்ன இருக்குன்னு பார்த்துக்கிடுங்க ? இப்போ எனக்கு உள்ள அனுபவத்தையும் சேர்த்து என்னால பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன், நம்புறேன் என தெரிவித்தார்.