கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்கள் செல்போனை பார்ப்பதற்கு பதில் புத்தகத்தை எடுத்து படி என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த லிகிதா சம்பவ நாளில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போன் பார்க்காதே என்று கூறியதால் இளம் பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.