இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மீதான மவுசு குறைந்து வருவதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ்  தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், அதிமுக – பாஜக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பதாக அடிபடும் பேச்சுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கு என தெரியாது. சில விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச முடியாது. ஏனென்றால் நான்  5 ஆண்டுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவன். ஐந்து ஆண்டுகளும் அந்த ஆட்சி நிறைவடையும் வரை நான் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தேன்.

அந்த ரூபத்தில் இப்போது நடக்கக்கூடிய இந்த அரசியல் என்பது ஒரு சந்தேகத்திற்குரிய ஒரு பார்வை தான் பரவலாக மக்களிடத்திலே பேசப்படுகிறது. ஏன் என்று சொன்னால் ?  பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசியல் என்பது வட இந்தியாவிலேயே மிக மிக மோசமான நிலையிலேயே சரிந்து கொண்டிருக்கிறது. அதை கண்கூடாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி  என்கின்ற தனி பிம்பமும் குறைந்து கொண்டிருக்கிறது. அதனுடைய மவுஸ் குறைந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவர் மீது அதிருப்தியில்  இருக்கிறார்கள்.

அதையும் வெளிப்படையாக பார்க்கக்கூடிய இந்த தருணத்திலே, இங்கு ஒருவேளை பிஜேபி – அதிமுக என்று இருந்தால் ?  சிறுபான்மையின மக்கள் மக்கள் மட்டுமல்ல, வெகுஜனை மக்களுடைய வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும். ஓன்று,  இரண்டு இடங்கள் கூட கிடைக்காமல் போய்விடும். ஆக அதை தவிர்பதற்க்காக  இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழற்றி விட்டதை போல தனியாக தேர்தலில் நின்று,  பிற்காலங்களில் ஏதாவது கிடைத்தால், அதை வைத்து மத்தியில் தனது ஆட்சியை நிறுத்திக் கொள்ளலாம் என்கின்ற குறுக்கு வழியை பிஜேபி யோசிக்கிறது என்பதுதான் வெகுஜன மக்களுடைய கருத்தாக இருக்கிறது. என்னுடைய கருத்தாகவும் அப்படித்தான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.