லெசன்ஸ், சைலென்சர் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தமிழில் ஜெர்ரி, அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை கடந்த 21ஆம் தேதி இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தியை நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இருவரும் இணைந்து குடும்ப விளக்கு சீரியலில் ஒன்றாக பணியாற்றியபோது காதல் மலர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக மீரா வாசுதேவன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறகு சார்பட்டா புகழ் நடிகர் ஜான் கொக்கேனுடனும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.