தமிழ் சினிமாவில் மூடுபனி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்திற்கு பிறகு கிளிஞ்சல்கள், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி நடிகர் மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரைலர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.