தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா விஷாலுடன் சேர்ந்து பட்டத்து யானை உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், உமாபதி மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகர் தம்பி ராமையா இருவரும் தற்போது பத்திரிக்கை வைக்கும் வேலையை துவங்கியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இருவரும் நேரில் சென்று பத்திரிக்கை வழங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம். தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.