கேன்ஸ் பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் உலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும்  இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவை சேர்ந்த நடிகை அனுசுயா சென்குப்தா வென்றுள்ளார்.

இவருக்கு அன் செர்ட்டன் ரெக்கார்டு பிரிவுக்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருக்கு ஷேம்லெஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.