பாலிவுட் சினிமாவில் பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த நிலையில் தற்போது 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்த  நிலையில் விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.