தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கார்த்திக் குமாரும், பாடகி சுசிலாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சுசிலா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதாவது கார்த்திக் குமார் தன் பாலின ஈர்ப்பாளர் எனவும், அவர் போதைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவார் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் ஒரு பாலின பொறுப்பாளர்கள் என்றும் சர்ச்சையான கருத்துக்களை கூறினார்.

அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கார்த்திக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சுசிலாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மான நஷ்ட ஈடாக அவர் தரவேண்டும் எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் வந்த நிலையில் நடிகர் கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசீலாவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு இந்த மனுவுக்கு சுசிலா பதிலளிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.