தமிழ் சினிமாவில் 80’களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யாவுக்கு திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு அது நடிகை சுகன்யாவின் மகள் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு நடிகை சுகன்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதாவது அது தன்னுடைய அக்கா மகள் என்றும் இது தொடர்பாக நான் விரிவான விளக்கம் அளித்தும் அதை ஏற்க மறுக்காமல் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இந்த பிரச்சினையை நான் பல வருடங்களாக சந்தித்து வருகிறேன். மேலும் என்னுடைய அக்கா மகள் சித்தியால் நான் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டதாக கூறுகிறார். இப்படி நாங்களே எங்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்து விட்டோம் என்று கூறியுள்ளார்.