பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில்  ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் அம்பேத்கர் தெளிவாகவும், கடுமையாகவும் இருந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்த ஜான்வியிடம், நெறியாளர் வரலாற்றில் எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ஜான்வி, அம்பேத்கரும், காந்தியும் விவாதிப்பதை பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.