பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தன்னுடைய குடும்பத்தை பெரும்பாலும் வெளியே காட்டியது கிடையாது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கவுண்டமணியோடு ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு அவரை இணைத்து பேசப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

நடிகை ஷர்மிளா உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவார்கள். அந்த நேரத்தில் முன்னணி ஹீரோக்களை  விடவும் அதிகமாக வதந்திகளில் சிக்கியது கவுண்டமணி தானாம். அதனாலேயே தன்னுடைய குடும்பத்தை வெளியே காட்டவில்லையாம் என்று கூறியுள்ளார்.