தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா லியோ திரைப்படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைப் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு. அது என்னவென்றால் நான் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும். ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளது. இது பற்றி நான் என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று திரிஷா வெளிப்படையாக கூறியுள்ளார்.