நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து  தற்போது பதினெட்டு வருட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக  மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் கார்த்திகா. இவர் பிரபலமான மகப்பேறு மருத்துவர்.

கார்த்திகா மருத்துவர்  கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் 19வது திருமண நாளை கொண்டாடினார்கள். இதுகுறித்து கார்த்திகா தன்னுடைய இன்ஸ்டால் பதிவில் நமக்கு திருமண வாழ்த்துக்கள் கார்த்திக். ஒன்றாக 26 வருடங்கள் திருமணம் ஆகி 19 வருடங்கள் ஒரு நாள் கூட நமக்குள் சண்டை இல்லாமல் போனது கிடையாது. நம்முடைய சண்டைகள் இல்லாமல் நான் இல்லை என்பது புரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.