நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமிக்சில் முதன்முறையாக ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் நடித்தனர். இறுதியாக இருவரும் மஜிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதற்கிடையில் இருவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விவகாரத்து செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மனம் திரைப்படமானது மீண்டும் தியேட்டர்களில் வெளியானது. இதனை நடிகர் நாக சைதன்யா ஹைதராபாத்தில் இருக்கும் தேவி 70 எம்.எம் திரையரங்கில் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டு பார்த்தார். அப்போது படத்தில் திருமணம் முடிந்து முதல் இரவு காட்சி வந்த பொழுது நாகசைதன்யா தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டது போல் கூறப்படுகிறது . அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்களை கோபத்தில் உட்கார சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.