தமிழில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நடிகை சுருதிஹாசன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். பாடல் பாடும் ஆர்வத்தின் காரணமாக இசை நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் சமீபத்தில் சலார் படத்தில் நடித்திருந்தார். தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனுவை பிரேக் அப் செய்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் இவர் கலந்துரையாடினார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், நான் இப்போது சிங்களாக இருக்கிறேன் வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.