மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972 அக்டோபர் 17ஆம் தேதி கழகத்தை தோற்றுவித்தார். இன்றைக்கு கழகத்திற்கு பொன்விழா கொண்டாடி 51 ஆம் ஆண்டு ஆதஅடி எடுத்து வைக்கின்றது.

இந்த 51 ஆண்டு காலத்திலேயே 31 ஆண்டு காலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அண்ணா திமுக கட்சி.   இந்த 31 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் ஆட்சியில்தான் இந்த தமிழகம் ஏற்றம் கண்டது.  கடை கோட்டில் இருக்கின்ற சாமானியன் கூட நன்மை கிடைக்கப்பெற்றது.

அனைத்து துறைகளையும் முதன்மை துறையாக செயல்படுத்தி காட்டிய அரசு அண்ணா திமுக அரசாங்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது. ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். எந்த பிரதிபலனும் பார்க்காமல் தலைமை அறிவித்தவுடன் சொந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு கழகம் தான் பெரிது,  கழகத்தை மீண்டும் ஆட்சியிலே அமர்த்துவோம் என்று சபதம் ஏற்று  வந்திருக்கின்றீர்கள். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பேசினார்.