மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையிலேயே நீதி ஒதுக்கி,  குடிதண்ணி பிரச்சனையை தீர்த்தது ஒரு சாதனை.

அதற்கு பிறகு கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதும் அழிந்துவிட்டது. புயல் காலத்தில்  ஆட்சியிலே  உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,  மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி புயல் எந்த அளவுக்கு வீசியதோ… புயல் வேகத்தை காட்டிலும்..  வேகமாக செயல்பட்டு..  புயல் உடைய அடிச்சுவடு இல்லாமல் திறமையாக நிவாரண பணிகளை மேற்கொண்டு செயல்படுத்தி அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

அந்த புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அள்ளி அள்ளி கொடுத்தோம். பொது மக்களுக்கு நிவாரணத்தை அளிக்கவும்,  விவசாயிகளுக்கு நிவாரணத்தை அளிக்கவும் மக்களை காத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என்று மக்கள் பாராட்டினார்கள் என் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா வந்தது. சாதாரண கொரோனா இல்ல. நீங்க முகத்தை மறைத்து தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாது.  உலகமே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கொரோனாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு,  அந்த கொரோனா வைரஸ்ஸை  அரவாக தமிழகத்தில் இருந்து அகற்றிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

கொரோனா வைரஸ் வந்தபோது மருத்துவர் பாதிக்கப்பட்டவர்கள். எப்படி அறிகுறி இருக்கும் என்று தெரியவில்லை, மருத்துவருக்கு தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் கூட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு…. நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த அருமை சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் என்னோடு இருந்து ”அண்ணா கவலைப்படாதீர்கள்” எப்பாடுபட்டாவது,

மருத்துவர்களையும் – செவிலிர்களையும் – மருத்துவ உதவியாளர்களையும் அழைத்து பேசி,  கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விலை மிதிக்க முடியாத உயிரை காப்பாற்றுவோம் என்று சொன்னார். அதிகாரிகளும் ஒத்துழைத்தார்கள், மருத்துவர்கள் ஒத்துழைத்தார்கள். தமிழகத்திலே விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.