செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திமுக அமைச்சர்கள் இன்னும் நிறைய பேர் மாட்டுவாங்கன்னு சொல்றாங்க. அதாவது மக்களுக்காக வேலை செய்கிறோம், அப்படிங்கும் போது..  வேலை செய்யணும். பொதுவா நீங்க பாத்தீங்கன்னா….  அம்மாவுடைய ஆட்சியில் நடந்த போதெல்லாம், எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அரசாங்கத்தில் அவங்களும் ஒரு ஆபிஸர் மாதிரி இருந்து வேலை பார்த்திருப்பாங்க. ஆனால்இப்ப அப்படி இல்ல. திமுக என்ன பண்றாங்க ?

ஆட்சின்னு வந்ததும்,  கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகள்…  அதோட செயல்பாடுகள்…  அதற்கு அரசாங்கத்தை துணையாக வைத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் அரசு வேலைகள் எல்லாம் ஆமை வேகத்தில் போகிறது, அதை கவனிப்பதும் அல்ல. அதிமுகவில் மன்னிப்பு கடிதம் கொடுத்து யார் இணைந்தார்கள். யாரும் இந்த மாதிரி கொடுத்ததா எனக்கு தெரியலையே…  நீங்க யாருன்னு நினைக்கிறீர்களோ,  அதுதான்.

பாஜகவே வெளியேற்றும் வரை பாஜக கூட்டணியில் நான் இருப்பேன் என ஓ. பன்னீர்செல்வம் சொல்லுறது  அவருடைய இஷ்டம். அவருடைய முடிவை நான் எப்படி சொல்ல முடியும். ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றது. உங்களுக்கெல்லாம் சொல்லாமல் நான் ஓ.பன்னீர் சொத்தை சந்திக்க மாட்டேன், சொல்லிட்டு தான் பார்ப்பேன்.

தமிழ்நாட்டுல இப்போ மக்களுக்கு என்ன நடக்குது ? என்னங்கறத பத்தி எல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறீங்களே….  என்ன காரணம் ?  நான் கேட்கிறேன், கேள்வி…  உங்களிடம்  கேட்கிறேன்..  என்னென்னமோ நடந்து கொண்டிருக்கிறது. அதை பத்தி யாருமே மக்களுக்காக யாருமே பேச மாட்டேங்கிறீங்களே,,  அது வருத்தமா இருக்கு. மீடியா அதை செய்யனும் இல்லையா ? மீடியா_க்கு அது கடமை இல்லையா ? தமிழக அரசு  ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.