தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்படும் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என தனி நீதிபதி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக பள்ளி நிர்வாகம் சார்பில் மேல்முறையீட்டு மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தனி நீதிபதிகளை அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுத்தேர்வு கிடையாது என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.