டிஎன்பிசி கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பதவிக்கு 731 காலி பணியிடங்கள் உள்ளதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த பணிக்கு மாத சம்பளம் 56,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி ஆணையம் கால்நடை உதவி மருத்துவர் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் 1:3என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் அடிப்படையில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.