தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாலா. தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பாலா நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். மலையாள சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வரும் பாலா அண்மையில் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பாலா தனக்கு நடைபெறும் அறுவை சிகிச்சை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் உங்களுடைய பிரார்த்தனையால் தற்போது மீண்டு வந்துள்ளேன். எனக்கு இன்னும் 3 நாட்கள் கழித்து ஒரு முக்கியமான ஆப்ரேஷன் நடைபெற இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையில் என்னுடைய உயிர் கூட போகலாம். நான் பிழைப்பது கடினம் தான். ஆனால் உங்களுடைய பிரார்த்தனையால் உயிர் பிழைத்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பாலா உருக்கமாக பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் உங்களுக்கு விரைவில் பரிபூரணமாக குணமடைந்து விடும் என ரசிகர்கள் பலரும் நடிகர் பாலாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்‌.