மலையாள திரையுலகில் பிரபல நடிகையான நிமிஷா தொண்டு முதல் திருசாட்சியும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை திலீஷ் போத்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் நினிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இவர் நடிப்பில் வெளியாகிய பாராட்டுகளை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் தான் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலும் அதே பெயரில் படமானது. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் இவர் நிர்வாண மாக வரையப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் சில இரவுகளில் என் விரல்கள் என் தலை முடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன. அப்போது நான் என் கண்ணை மூடுகின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இந்த பதிவை இவர் தான் பகிர்ந்தாரா? அல்லது நிமிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று நெட்டிசன்கள் சந்தேகத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்