தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய தளபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுமி ஒருவர் நடிகர் விஜய் என்னை பார்ப்பதற்கு நேரில் வரவேண்டும் என கூறி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை விஜயின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்தனர். இதன் காரணமாக சிறுமி பேசிய வீடியோவை விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சிறுமியிடம் வீடியோ கால் மூலமாக பேசியுள்ளார். நடிகர் விஜய் சிறுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் 2 நிமிடம் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜயை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

https://twitter.com/BussyAnand/status/1641738830259814406?s=20