மக்களவையில், வங்கிகள் குறித்த சட்ட திருத்த மசோதா தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹிந்தியில் பதிலளித்தார். அவரது பேச்சில் குறை உள்ளதாக இண்டியா கூட்டணி கட்சிகள் தெரிவித்தனர். இதற்கு நிதி அமைச்சர் கூறியதாவது, என்னை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்ததற்கு திமுக தான் காரணம். அதனால் அவர்கள் மீது தான் புகார் அளிக்க வேண்டும். சிறிய வயதில் நான் ஹிந்தி படிக்க விரும்பினேன். அதனால் கேலி செய்யப்பட்டேன். ஹிந்தி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதி இல்லையா?, எனக்கு ஹிந்தி கற்றால் என்ன தவறு.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு தமிழை கொண்டு சென்ற பிரதமர் யார் என்று தெரியுமா, அதனை மோடி தான் செய்தார். தமிழை தொடர்ச்சியாக மேற்கோள் காட்டியவர் யார் என்று தெரியுமா?, தமிழ் மொழியை அவர் மதிக்கிறார். திமுக கூட்டணி வைத்துள்ள ஒரு கட்சியை சேர்ந்த பிரதமர் தமிழை பற்றி பேசினார் என சொல்ல முடியுமா? ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்க வேண்டும். அதை தான் பிரதமர் ஆதரிக்கிறார் என்பதை கூற விரும்புகிறேன் என்று அவர் பேசினார்.