கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற காவல்துறையினர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் பாஸ்போர்ட் குறித்து பரிசீலனை போது, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது உங்களுடைய அண்ணன் மீது கிரிமினல் வழக்கு இருக்கிறது. அதனால் உங்களுக்கு பாஸ்போர்ட் ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
நான் சொல்லும் படி, கேட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் கதவை பூட்டும் படி இளம் பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்தார். இதையடுத்து வீட்டின் கதவை காவல்துறையினர் கிரண் பூட்டிவிட்டு, இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் கிரணை பணியிடை நீக்கம் செய்து துணைபோலீஸ் கமிஷனர் கிரிஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.