
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அது நல்வாழ்வுத்துறையா ? மக்களுடைய நல்வாழ்வை கெடுக்கும் துறை. அந்த அளவிற்கு ஹாஸ்பிடலில் மருந்து கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டார் என்றால் வாங்க போகலாம் என்று…உங்களிடம் சொல்லிட்டா நாங்க வர முடியும். நாங்க போகிற இடத்திற்கு நீங்கள் வாங்கள்… கூட்டிட்டு போகிறேன்…. எத்தனை ஆஸ்பத்திரியில் மருந்து இருக்குன்னு நான் சொல்லுறேன்..
மருந்து இல்லை, எதுவுமே இல்லை. அதைப்பற்றி எதுவும் கவலை இல்லை… அவருக்கு கூட மராத்தான் ஓட்டப்பந்தயம் ஓட வேண்டும். முதலமைச்சர் உடன் வாக்கிங் போக வேண்டும். இதுதான் அவருடைய ஒரே aim. ஓட்டுப் போட்டு ஜனங்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்…
அந்த அடிப்படையில் மக்களுக்கு மருந்து கொடுப்பது, மருத்துவமனை நல்லா வைத்துக் கொள்வது கிடையாது.ஆட்சிக்கு வந்து 29, 30 மாதம் ஆகுது. இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது.அந்த அளவிற்கு அரசாங்க மருத்துவமனை கேலிக்கூத்தாகிவிட்டது. அரசாங்க மருத்துவமனை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது.
எலக்சனுக்கு இன்னும் டைம் இருக்கிறது. கட்சி, பொதுச் செயலாளர் முடிவு பண்ணுவார்கள். அப்ப பாருங்கள் எங்க கூட யார் யார் வருகிறார்… யார் திமுகவிலிருந்து கழண்டு போகிறார்கள் என்று பாருங்கள் இந்தியா கூட்டணியில் ஒரு இடத்தில் பார்த்தீர்கள் என்றால், பார்லிமென்ட் எலெக்ஷன் பற்றி சிந்திக்காமல், மாநில தேர்தல் பற்றி தான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.
அங்கேயே முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு கூட்டணியில் முரண்பாடு இருக்கிறது. கூட்டணியில் ஒரு முரண்பாடு இல்லாமல், அப்படியே பின்னிப்பிணைந்தவர்கள். ஒட்டிப் பிறந்தவர்கள் அப்படியா இருக்கிறார்கள். ஒன்றுமே கிடையாது… எல்லாமே முரண்பாடு உடைய மொத்த உருவமாக இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இன்று இருக்கிறார்கள். நாளைக்கு நிச்சயமாக கழண்டு வருகின்ற நிலை தான் நிச்சயமாக வரும் என தெரிவித்தார்.