செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தொழில் வளம் பெருக வேண்டும். வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். இது தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி  பல முறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கே அந்த  சென்னை, கோவை, போன்ற பகுதி அளவிற்கு வளர்ச்சி கிடையாது.

கன்னியாகுமரியில் இயற்கை வளங்களை அங்கே சுரண்டி கொண்டு,  அங்கிருந்து கேரளாவுக்கும் மணல், கற்கள் கடத்திக் கொண்டிருக்கிறார். இது அரசு சார்ந்த  உயர் பதவியில் உள்ளவர்கள் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல அறிக்கைகள் நாங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை.

இதனை நிறுத்தவில்லை என்றால் ? எனது தலைமையில் கன்னியாகுமரியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். 100 அடி, 200 அடிக்கு ஆழமாக தோண்டி அங்கு வெடி வைத்து சுற்றுச்சூழலை கெடுப்பது மட்டுமல்ல,  கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டாரஸ் லாரிகள் மூலமாக கேரளாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து இயற்கை வளங்களை கடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள். அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.