தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது தனுஷ் பேசியதை வைத்து ரசிகர்கள் அவரை பங்கம் செய்து வருகின்றார்கள்.

தனுஷ் தனக்கு பள்ளி பருவ காலத்தில் ஒரு காதலி இருந்ததாகவும் அவருக்காக டியூஷன் சென்றதாகவும் கூறியிருந்தார். இதை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றார்கள். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த் தனது முன்னாள் காதல் குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது தனுஷும் தனது முன்னாள் காதல் குறித்து பேசி இருக்கின்றார். இதனை வைத்து நெட்டிசன்ஸ் அவரை பங்கம் செய்து வருகின்றார்கள்.