திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,   திருச்சி என்றால் சாதாரணமானது அல்ல. இது ஒரு மாவட்டமா இருக்கும்போதும் பார்த்திருக்கிறேன்….. இன்னைக்கு மூணு மாவட்டமாகியும் பார்த்துக் இருக்கேன்…. இன்னும் கொஞ்ச நாள்ல ஐந்து மாவட்டமா கூட ஆகும். ஆளுக்கு தகுந்த மாதிரி தானே பிரிக்கின்றோம்… பிரித்து விட்டு மாவட்டம் போட்டுட்டு….  அதுக்கு மேல ஒரு மாவட்டம் போடுறாங்க…. பொறுப்பு மாவட்டம் என்று….

எம். எஸ் மணி, ராபி,  கிருஷ்ணமூர்த்தி இவங்கள எல்லாம் பழையக் காலத்தில்DMK.  நம்முடைய மணி அவர்கள் என்னோடு மிசா கைதியாக வேலூர்  சிறைச்சாலையில் இருந்தவர்…. அவருக்கு CMCஇல் ஆப்ரேஷன் எல்லாம் நடந்தது .. அவரை அப்படி காப்பாத்தினோம்… அவருக்கு என்று தனி சமாளியால்…  குடிப்பதற்கு வெந்நீர்… எல்லாம் செய்து அவரை அற்புதமாக வெளியேக் கொண்டு சேர்த்தோம்… காரணம் அவர் மீது அவ்வளவு மரியாதை.

ஆறு மாத கடுங்காவல் என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். படித்து இருப்பீர்கள்.. கலைஞருக்கு பிறந்தது திருவாரூர். அது  தஞ்சை மாவட்டமா இருக்கலாம். ஆனால் அவருடையத் தலைமை மாவட்டம் என்றைக்குமே திருச்சி தான்.   எந்த ஊருக்கு போறதா இருந்தாலும், திருச்சிக்கு வந்துட்டுத் தான் போவாரு…. வண்டி வந்து நின்ன உடனே கதவை திறக்குவதற்கு முன்பே….   முத்துகிருஷ்ணன் உள்ளே ஏறி உட்கார்ந்து கிடுவார்.

பரமசிவன்அவருக்கு முன்ன  ஏறி உட்கார்ந்து கிடுவார். இவுங்க எல்லாரையும் பார்த்துட்டு அன்பில் இறங்குய்யா என சொல்லிட்டு, அவரு ஏறி உக்கார்ந்துபாரு… ஆகவே அந்த வண்டிய பாத்தீங்கன்னா ஏழு, எட்டு பேர் உட்கார்ந்துட்டு போவாங்க….  அப்பல்லாம் நானே வேலூரில் கூட்டம் பேசிவிட்டு அவரைக் கொண்டு வந்து செல்வா லாட்ஜ் என்று இருந்தது.

இப்போ இருக்கா ? இல்லையான்னு எனக்கு தெரியல. அந்த லாட்ஜ்ல  தான் தலைவரை  கொண்டு வந்து விட்டுட்டுப் போனேன். ஆகையால் தலைவருக்கு திருச்சி மாவட்டம் தான் தலை நகர். தலைவருக்கு மட்டும் அல்ல   “திமுகவுக்கே திருச்சி மாவட்டம் தான் தலைநகரமாகும்.” இந்த கட்சி தேர்தலில் ஆட்சிக்கு போகணும்… நிற்கலாமா ? வேண்டாமா ? என்று பர்மிசன் கொடுத்த மாவட்டமே திருச்சி தான.

அன்னைக்கு மாத்தி ஓட்டு போட்டிருந்தால் இவர் மந்திரி கிடையாது… நானும் மந்திரி கிடையாது…. தி.கா  மாதிரி நாங்களும் கூட்டம் நடத்தி இருப்போம். ஆகையினால இந்த திருச்சி தலைநகராக வேண்டும் என்று எம்ஜிஆர் கருதினார். எனக்கு ஏடிஎம்கே பிடிக்கவில்லை என்றாலும்,  அந்த கருத்து பிடிக்குது டெல்லி ரொம்ப தூரம் இருக்கிறதுனால….  நமக்கு அவங்க அன்னியர்களாகவே தெரிகின்றார்கள்.  இந்தியாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கணும். அதே மாதிரி தமிழ்நாட்டின் தலைநகர் மத்தியத்தில இருக்கணும் அப்படின்னா…

திருச்சியில் தான் தலைமையகத்துக்கு கரெக்ட் பிளேஸ். யாராவது ஒரு ஆள் வருவான்… ஒரு நாளைக்கு நடக்கும்…. ஆகையினால் திருச்சி தான் கட்சிக்கும் முன்னோடியாக திகழக் கூடியது. இந்த திருச்சி மாவட்டத்தில் தான் எல்லாவிதமான கழக செய்திகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. வரலாற்றிலே பார்த்தால்….  இந்த ஊரின் உடைய பெயர் இல்லாமல் இருக்காது. இந்த ஊரில் இருக்கிற தலைவர்கள் பெயர் இல்லாமல் இருக்காது….

திருச்சி அன்பில்… தஞ்சாவூர் மண்ணை நாதன் சாமி என்று ஒரு ஐஞ்சு, ஆறு பெயர் தான் சொல்லுவாங்க…  ஆனால் அந்த அஞ்சாறு பேர் கட்சியை வளர்த்தாங்க பாருங்க…  அதனால் இன்னைக்கு அன்பில் மகேஷ், நானும் அமைச்சர்களாக உக்கார்ந்து கொண்டு  இருக்கின்றோம் என தெரிவித்தார்.