நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையை தொடங்கியவுடன், “புண்ணியமான தமிழ்நாட்டு மண்ணில் நின்று தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கைகூப்பி தெரிவித்தார். இதனால் அங்கு இருந்த பாஜக தொண்டர்கள் உற்சாகக் கைதட்டலால் வரவேற்றனர்.

மேலும் அவர் தனது உரையில், “தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக பாசம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. எதிரிகளை நடுங்கவைக்கும் தலைமைத்துவம் கொண்டவர் நம் பிரதமர்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம் தொண்டர்களின் உழைப்பே” என்றும் தெரிவித்தார். அவரது உரை முழுவதும் பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.