பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான் அபியான் என்ற திட்டத்தை செயலாற்றி இருக்கின்றோம்.  கருவுற்ற காலத்தில் அவர்களுக்கு சக்தி மிகுந்த ஆகாரங்கள்  கொடுப்பதற்கான திட்டத்தை தந்திருக்கின்றோம்.

சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் என்கின்ற திட்டத்தின் கீழ் கர்ப்பவதி பெண்களுக்கு மருத்துவ சோதனைகள் செய்திருக்கின்றோம்.  2014 ஆம் ஆண்டிற்கு முன்பு பெண்களின் பாதுகாப்பு பற்றி எந்த சிந்தையும் இல்லாமல் இருந்தது. இப்போது பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்தால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று சட்டத்தை மாற்றி இருக்கிறோம்.

நண்பர்களே நான் நாட்டின் முதல் பிரதம மந்திரி கழிப்பறைகள் கட்டுவது பற்றி செங்கோட்டையில் உரையாற்றி இருக்கின்றேன்.  அதை அனைவரும் கிண்டல் செய்தார்கள்,  கேலி செய்தார்கள். பெண்களுக்கான மரியாதை என்பது நம்மளை பொறுத்தவரை மிகவும் பெரிய விஷயம். பாரதிய ஜனதா பார்ட்டி பெண்களுக்கு பல நல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.  அவர்களுக்கு உஜ்வாலா எரிவாயு திட்டம் கொண்டு வந்திருக்கிறது,  வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் வீட்டின் எஜமானியர்களாக ஆக்கியிருக்கிறோம்.

குழாய் மூலம் குடிநீர் தந்து இருக்கின்றோம்.  அவர்களுக்கு கழிப்பறை தந்திருக்கின்றோம். ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் தரும் திட்டத்தை தந்திருக்கின்றோம். பெண்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டத்தை தொடங்கி,  அவர்களுக்கு நேரடியாக பணத்தை செலுத்தும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஒரு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம். அவர்களுக்கு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. இதனுடைய பலன் கிராமத்து பெண்களுக்கு  கிடைத்திருக்கின்றது.

முன்னாள் இரவு நேர ஷிப்டுகளில் தொழிற்சாலைகள் பெண்கள் வேலை செய்வதற்கு பிரச்சனை இருந்தது. இப்போது அதையெல்லாம் நாங்கள் தீர்த்து இருக்கிறோம். ராணுவத்தில் பெண்களை சேர்த்திருக்கிறோம்.  சைனிக் ஸ்கூல்களில் பெண்களை சேர்த்திருக்கின்றோம். இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பெண்கள் படைகள் அணிவகுத்ததை நாம் பார்த்திருக்கின்றோம்,  இதனால் நாடே பெருமை அடைந்தது.

வருகின்ற காலத்திலேயே பெண்களுக்கு வாய்ப்புகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். 15000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு லோன் கிடைக்கும்.  அதன் மூலம் அவர்கள் அறிவியலில் பெரிய ஆசானவர்கள். ஐந்து கோடிக்கும் மேலான பெண்கள் லட்சாதிபதியான ஆவதற்கு திட்டங்கள் தீட்டி இருக்கின்றோம்.  புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் பெண்கள் கல்வி பெறுவதில் பல திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் விளையாட்டிலும்,  மிகப்பெரிய சாதனைகள் செய்யும் வண்ணம் திட்டங்கள் இருக்கின்றன என பேசினார்.