செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண்ணாக…பெண்ணின் கஷ்டத்தை பெண்கள் தான் உணர முடியும்.  நான் உறுதியாக அதை சொல்றேன். அதற்கு நமக்கு ஒரே உதாரணம்…  இன்னைக்கு நீங்க யாரு ரோல் மடலை எடுத்துக்கிறீங்க….   பாலிடிக்ஸ்ல நான் இருக்கேன்…. ஒரு லேடியா உங்களுடைய ரோல் மாடல் யாருன்னு பல பேரு என்கிட்ட கேள்வி கேட்டு இருக்காங்க….  நான் இந்திரா காந்தி அம்மையாரை சொல்லலாம்…. மம்தா பானர்ஜி சொல்லலாம். ஆனால் அவர்கள் எல்லாம் நமக்கு அறிமுகமான நபர்கள் அல்ல. அடுத்த மாநிலங்களில் இருப்பவர்கள். இங்கே  தமிழ்நாட்டில்  நம்முடன் வாழ்ந்த….

ஒரு டைனமிக் லேடி… புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்….  பெண்களுக்காக எத்தனையோ விஷயங்களை அவங்க செஞ்சிருக்காங்க. அவங்க சந்திக்காத சவால்கள் இல்லை….. அவுங்க எல்லாத்தையும் எதிர்கொண்டு ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.  எம்ஜிஆர் தான் கேப்டனுக்கு என்னைக்குமே குரு….. ரோல் மாடல்…  அதற்காகத்தான் அவருடைய சிலையை  நாங்க இங்க வச்சுருக்கோம். அதே போல ஒரு பெண் தலைவராக….  என்னுடைய ரோல் மாடலாக புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை நான் எடுத்துக் கொள்கிறேன்.

அவருடைய தைரியம், கம்பீரம், முடிவெடுக்கும் திறன், அத்தனையும் நிச்சயமாக ஒவ்வொரு நாளும் அவங்கள பார்த்து இருக்கேன்…   தேசிய முற்போக்கு திராவிட கழகம் கழகத்தில் இருக்கும் அத்துணை பெண்களுக்கும்….  இன்னும் அதிகமான பொறுப்புகளை நாங்கள் வழங்க இருக்கிறோம். என்னை சுற்றி பெண்களுடைய….  மிகப்பெரிய பொறுப்புகளை நாங்கள் அறிவிக்க இருக்கிறோம். அது மட்டும் கிடையாது. தமிழகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த தாய்மார்களுக்கும்… என் அன்பு சகோதரிகளுக்கும்….

எப்படி நீங்கள் எல்லாரும் கேப்டன் மீது ஒரு மிகப்பெரிய பற்றும்,  நம்பிக்கையும்  வைத்திருக்கீர்களோ…… உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே தலைவரை ஏற்றுக் கொண்டீர்களோ….. அந்த அன்பிற்கும்,  பாசத்திற்கும் முதலில் நான் தலை வணங்குகிறேன். அது போல தான் அண்ணி என்றால் வேறு இல்லை. அண்ணனின் பாதி தான் அண்ணி என்பதை என் சகோதர –  சகோதரிகள் உணர்ந்திருப்பீர்கள். என்றைக்கும் பெண்களுக்கு நான் முழு பக்க பலமாக இருந்து….  தமிழ்நாட்டின் அனைத்து பெண்களுக்கும்….  எந்த ஒரு பிரச்சனைனாலும் முதல் ஆளாக நான் களம் காண்பேன்…  அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.