செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை இன்றைக்கு வரைக்கும்  நடக்கல.   தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கோ,  யாரெல்லாம் லீடர்ஸ் இருக்காங்களோ….  அவர்களை அத்தனை பேருமே நான் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு நேரிலும்,  போனிலும் whatsapp, facebook  மூலமாக எங்களுக்கு twitter மூலமாக வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க.

எல்லா தலைவர்களுமே எங்கள் கழக நிர்வாகிகளோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். தேர்தல் நேரம் வரும் பொழுது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் நிச்சயம் நாங்கள் உங்களுக்கு தருவோம். அனைத்து தலைவர்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உடன் நட்புடன் தான் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மை தான்.  நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். அவங்க சொல்றது உண்மை. நம்ம ஏன் அடுத்த மாநிலத்து கிட்ட போய் கை யேந்தனும்ன்னு  நானும் கேள்வி கேட்கிறேன். ஒரே ஒரு நாள் மழை. நம்ம எல்லாரும் சென்னையில தான் இருக்கோம். ஒரே ஒரு நாள் மழை சென்னை தங்குச்சா ? யோசிச்சு பாருங்க…. கடவுள் நமக்கு மழையை  வரமாக கொடுத்துக்கிட்டு இருக்காரு. கடந்த ஆறு மாசமா நம்ம பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்…  நமக்கு வேண்டியதை விட சர்ப்ளஸ் ஆஃப் வாட்டர் நமக்கு  ரெயின் மூலமா கிடைச்சுக்கிட்டு தான் இருக்கு.

இதை சேமிக்கின்ற திறன் நமது அரசுக்கு இல்லை. தூர்வாரப்படுவதில்லை….  வருகின்ற மழை நீரை எப்படி சேமிக்க வேண்டும் ? அதை எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் தூர்வாரப்பட்டு… தடுப்பணைகள் அமைத்து… குளம் – ஏறி போல் டேம்ஸ் எல்லாம் நல்லபடியாக தூர்வாரி…  அந்த வாட்டரை நாம் சேமித்தாலே யாரையும் நாம் போய் கேட்கவும் வேண்டாம்….  யார்கிட்டயும் நாம் கையேந்தவும்  வேண்டாம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு…

உறுதியாக நான் சொல்கிறேன்….  கர்மவீரர் காமராஜர் அணைய கட்டினாரு…  அதுக்கு அப்புறம் எந்த அணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கிறது? என்ற கேள்வி உங்கள் முன் நான் கேட்கிறேன். நீங்கள் எல்லாம் அறிவாளிகள், படித்தவர்கள், தமிழ்நாட்டின் அனைத்து வளங்களையும் காக்கப்பட வேண்டும் என்பதில் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் அத்தனை உரிமைகளும் உண்டு.  இன்றைக்கு நம்முடைய கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றது.

கொஞ்சம் நஞ்சம் கிடையாது…. அத்தனை கனிம வளங்களும் இன்றைக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவில்  மணல் கொள்ளை,  கனிமவளக் கொள்ளை என்று ஒரு புறம்…  அப்போ அந்த நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஒரு அரசு அதற்கான எந்த திட்டமிடலும் இல்லை. சரியான திட்டமிடல் இருந்தால்…  யார்கிட்டயும் தமிழ்நாடு கையேந்த வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்காது. இதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ,  அவர்கள் தான்…. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என தெரிவித்தார்.