ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பகை எனில் குற்றம் வரினும் தொலையாது என்ற  கலித்தொகைக்கு இலக்கணமாம் வீர மிகுந்த இராமநாதபுரம் மண்ணுல…  கழக தீரர்களான  நாம கூடி இருக்கின்றோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், இறையியல் வளர்ச்சிக்கும் ஆட்சிய தொண்டு காலத்தால் அழிக்க  முடியாதது,  மறக்க முடியாதது. இந்த மண்ணை காக்கும் பெரும் போர்ல  12 வயதான ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஈடுபட்டார்.

தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேது சீமையின் உரிமையை பறித்தவர்களையும், தன்னை திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேது  மன்னர் திட்டமிட்டார். சிறையில் இருந்தபடியே மக்கள் எழுச்சி பெற வைத்தார். மன்னருடைய கட்டளையை மனசுல வச்சி,  ஒரு பெரும் போரையே மக்கள் நடத்தினார்கள்.

ஒரு நாள் அல்ல… இரண்டு நாள் அல்ல… 42 நாட்கள் விடாமல் அந்த பெரும் போரை செய்தார்கள். திருச்சியில் இருந்தா ? அவரை ஒவ்வொருத்தரா வந்து பார்ப்பாங்க என்பதால் ? சென்னையில செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இழுத்துக்கிட்டு போய்  கிழித்துக்கொண்டு போய் தனிமை சிறையில் அடைத்து வைத்தது பிரிட்டிஷ் அரசு.

14 வருஷம் தனிமை சிறையில் இருந்து… சிறையிலையே மரணம் அடைந்தார் அவர். எந்த குற்றச்சாட்டு இல்லாமல் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைத்துக் கொல்லப்பட்டார்  சேது மன்னர். இத்தகைய சேதுபதி மன்னரை பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே….  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டினவர் தான் நம்முடைய நெஞ்சில் வாழக்கூடிய… தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

அப்படிப்பட்ட இந்த சேது  சீமைக்கு ஏராளமான நன்மைகளை செஞ்ச ஆட்சி நம்முடைய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி. இங்கே எல்லோரும் குறிப்பிட்டார்களே…. ஒரு காலத்துல தண்ணி இல்லாத காடு என்று சொல்லப்பட்ட இந்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு,  இந்த அடியேன் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது தான்,  காவேரி கூட்டு குடிநீர்  திட்டம் கொண்டு வந்தோம் என தெரிவித்தார்.