என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நம்முடைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் பேசினார். ஒரு முதலமைச்சர் அவர்கள் என்ன பேசக்கூடாது ? என்பதற்கு இலக்கணமாக நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பேச்சு ராமநாதபுரத்தில் இருந்தது.

குறிப்பாக பாராளுமன்றத்தில் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தினுடைய சில தலைவர்களை குறிப்பிட்டு பேசினார். கர்மவீரர் காமராஜர்,  ஐயா முத்துராமலிங்க தேவர் ஐயாவை,  புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை எல்லாம் குறிப்பிட்டு பேசினார். இப்படிப்பட்ட ஆன்மிகம் இருக்கக்கூடிய மண்ணுல…

தேசபக்தர்கள் இருக்கக்கூடிய மண்ணுல… திமுகவைச் சேர்ந்த அமைச்சரை EV. வேலு அவர்கள் பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேசி இருந்தார்கள். அதற்கு நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பேசும்போது,  என்ன சொன்னார்கள் தெரியுமா ? தமிழக பாரதி ஜனதா கட்சியை வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே…  இந்தியாவிற்கே தெரியும்.  உள்ளொன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசுகின்ற ஜாதிக்கு பிறந்தவர்கள் யார் என்று இந்தியாவிற்கே தெரியும். அது திராவிட முன்னேற்ற கழகம். ஏன் ? இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 1977 தமிழகத்திற்கு வரும்போது..  அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு களங்கத்தை செய்தவர்கள் திமுக.

அன்னக்கி நெற்றி பொட்டியிலிருந்து இந்திரா காந்தி அம்மையருக்கு குருதி வந்தபோது…  கலைஞர் கருணாநிதி அவர்கள் என்ன சொன்னார் ? பெண்ணென்று இருந்தால் மாசம் மாசம் ரத்தம் வரும்.அதே போன்று ரத்தம் என்று பெண் இனத்தையே கேவலப்படுத்திய ஒரு பிறவியாக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

அதே இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 3 ஆண்டுகள் கழித்து 1980ல் தமிழகத்திற்கு வந்தபோது….  இதே திமுக என்ன சொல்லுச்சு ? நேருவின் மகளே வா,  நிலையான ஆட்சி தருக என்று சொல்லவில்லையா ? அது எப்படி மூன்று ஆண்டுகளில்….  கேவலப்படுத்திய இந்திரா காந்தி அம்மையார் அவர்களை,  மூன்று ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு வரவேற்று…

சிவப்பு கம்பளத்தை விரித்து,  நேருவின் மகளே  வா…. வா நிலையான ஆட்சி தருக…   தருக என்று சொன்ன திமுக. உண்மை சொல்ல வேண்டுமென்றால் ? ஒரு மானம் கெட்ட கூட்டம் திராவிட முன்னேற்ற கழகம். அந்த மானம் கெட்ட கூட்டத்திற்கு தலைவராக  இருக்கக்கூடிய மு.க ஸ்டாலின் அவர்கள்,

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பற்றி பேசுவதற்கு அவரின் கால் நகத்தில் இருக்கக்கூடிய அழுக்கு கூட நம்முடைய மு.க ஸ்டாலின் சமம் கிடையாது. அதனால் முதலமைச்சர் அவர்களே…  நேற்று நீங்க பேசினீங்க. பாரதிய ஜனதா கட்சி வேறு தலைவர்களை பற்றி பேசினார்கள். ஆமாம்…!  அப்படித்தான் பேசுவோம். நீங்க பேச மாட்டீர்கள்,  நாங்கள் பேசுவோம் என தெரிவித்தார்.