செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லாது என்று சொல்கிறது. என்ன பண்ணி இருக்கணும் ? நியாயமாக இருந்திருந்தால்…  அந்த சட்ட திருத்தத்தை… உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று ,  நீட்டை ரத்து செய்திருந்தால்…  இன்றைக்கு இந்த ஸ்டாலின் பேசுவதற்கு யோகியதை இருக்கிறது.

திமுக நீட்டை பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கிறது. ஆனால் என்ன செய்தது ? உச்ச நீதிமன்றம் நீட்டு செல்லாது என்று 2012ல் கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பை…. மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது யார் ? இதே காங்கிரஸ். காங்கிரஸ் அரசாங்கம் தான்   நீட் ரத்து என்ற தீர்ப்பை மறுசீராய் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்தது.

அதன் மீது தான் 2016-லே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்தியா முழுமைக்கும் நீட் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அந்த சட்ட திருத்தம் செல்லும். இனி இந்தியா முழுவதும் நீட் மூலமாகத்தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது.

ஆக முழுக்க முழுக்க என்ன காரணம் ? நீட்டை கொண்டு வந்தது திமுக –  காங்கிரஸ் கூட்டணி. உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்த போது,  அதை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று நீட்டை உறுதி செய்தது இதே காங்கிரஸ் – திமுக கூட்டணி. இது அத்தனையும் மறைத்துவிட்டு,  இன்றைக்கு திமுக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது, வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.

நீட்டை கொண்டுவந்தது இவர்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பாக வழக்கு போட்டது இவர்கள். எங்களுடைய அம்மாவுடைய அரசு…  எடப்பாடியாரின்  அரசு…  இந்த நீட்டை மறுசீராய்வு செய்ய வேண்டும்,  ரத்து செய்ய வேண்டும். இந்திய மெடிக்கல் கவுன்சிலின் விதி எண் 14 செல்லாது என்று கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது 2010ல்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்ற போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு…. இரண்டு ஆண்டு காலம் அந்த வழக்கை நடத்துவதற்கு எந்த யோகிதையும் இல்லாத…. அருகதையற்ற  இந்த திமுக அரசு, முதலமைச்சர்.  வழக்கை நடத்தினால் தங்களுடைய பொய் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்று தெரிந்து கொண்டு, இப்போது என்ன செய்திருக்கிறார்கள் ? நாங்கள் போட்ட SLP பெட்டிஷனை  வாபஸ் வாங்கிக்கொண்டு புதிதாக, ஒரு வழக்கை போட்டு இருக்கிறார்கள்.

சிவில் சூட் போட்டு இருக்கிறார்கள். SLP போட்டாலாவது ஓராண்டு,  இரண்டு காலத்தில் விரைந்து முடிக்கப்படும். சிவில் ஷூட் போட்டா,  என்ன ஆகும் ? ஆண்டு கணக்காககும்.  திமுக அரசுக்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனென்றால்  அதை கொண்டு வந்ததே திமுக தான். ஆகவே அவர்களுக்கு இரத்து செய்யணும் என்ற உண்மையான எண்ணம் இல்லை. நீட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டும். மக்களுடைய உணர்ச்சிகளை தூண்ட வேண்டும். மாணவர்களுடைய உணர்ச்சியை தூண்டி, மத்திய அரசாங்கம் மீது  குறை சொல்வதற்கு ஏதாவது காரணம் வேண்டும் என்பதற்காக…

இன்றைக்கு நீட்டை வைத்து,  மாணவ – மாணவிகளுடைய உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. யார் செத்தால் எனக்கென்ன ? எத்தனை மாணவர்கள் செத்தால் எனக்கென்ன ? எத்தனை மாணவிகள் செத்தால் எனக்கு என்ன ?  எனக்கு தேவை திமுக அரசு. என்னுடைய மகன் அரசியல் செய்ய வேண்டும். அதற்காக இந்த நீட்டை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தம்பி உங்க தாத்தாவையே பார்த்தாச்சு. இந்த உண்ணாவிரதம். உன்னை விட பெரிய வசனகர்த்தா. கதை ,  திரைக்கதை வசனகர்த்தா உங்க தாத்தா கருணாநிதி.