சீனாவில் உள்ள ஒரு பூச்சிகள் அருங்காட்சியகம் (Insect Museum), பூச்சிகளைக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட அசாதாரணமான காபிகளை விற்பனை செய்து வருவது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

‘கரப்பான்பூச்சிக் காபி’ (Cockroach Coffee) மற்றும் எறும்பு பானம் போன்றவற்றை அந்த அருங்காட்சியகம் விற்பனை செய்கிறது. கரப்பான்பூச்சிப் பொடியை (Cockroach Powder) காபியின் மீது தூவி, வறுத்த உணவெலிகள் (Roasted Mealworms) கோப்பையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த கரப்பான்பூச்சிக் காபியின் விலை 45 யுவான் (சுமார் ₹500) ஆகும். “இது அருங்காட்சியகத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது; பயன்படுத்தப்படும் அனைத்துப் பூச்சி மூலப்பொருட்களும் உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குபவை,

மேலும் அவை பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன” என்று அருங்காட்சியகத்தின் பிரதிநிதி விளக்கமளித்துள்ளார்.

“கரப்பான்பூச்சிக் காபி நட்டி (nutty) மற்றும் புளிப்புச் சுவை கொண்டது, எறும்பு காபி இன்னும் அதிக புளிப்புச் சுவை கொண்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வினோதக் காபியைப் பார்க்கச் செல்லும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 10 கோப்பைகள் வரை வாங்குகிறார்கள் என்றும், “பலருக்கு மனரீதியான வெறுப்பு உள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.