சீனா தற்போது ஒரு புதிய விதமான டவல் ஒன்றை தயாரித்துள்ளது. அதாவது அதனை நீங்கள் எளிதில் பையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. அதாவது ஒரு வீடியோவில் பெண் ஒருவர் மூட்டை மூட்டையாக இருக்கும் பைகளை பிரிக்கிறார். அதில் இருக்கும் ஒரு சிறிய பாக்கெட்டை எடுத்து அதை பிரித்து அதிலிருந்து ஒரு வெள்ளை நிற டவலை எடுக்கிறார். அது மிகவும் சிறிய அளவில் இருக்கிறது.

 

இதையடுத்து அந்த டவலை தண்ணீரில் நனைக்கிறார். அது பெரிதாக மாறுகிறது. இதையடுத்து அந்த தண்ணீரை பிழிந்து விட்டு அந்த டவலை விரிக்கிறார். அது மிகவும் பெரிதாக இருக்கிறது. நீங்கள் நெடுதூரம் பயணிக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.