பிரிட்டனில் கடந்த 158 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல போக்குவரத்து நிறுவனமான KNP Logistics திடீரென தனது சேவைகளை முடக்கியது.
நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பொருட்களை வழங்கி வந்த இந்த நிறுவனம், தற்போது சைபர் தாக்குதலால் கடும் நட்டத்தை சந்தித்து மூடப்பட்டுள்ளதான செய்தி வெளியானதும் தொழில்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர், தனது கணக்குக்கு பலவீனமான கடவுச்சொல்லை (password) அமைத்திருந்த நிலையில், அதனை அகிரா எனும் சைபர் குற்றவாளிகள் கையாளும் குழு யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்புக்குள் ஊடுருவியது.
அதன் பின், நிறுவனத்தின் முக்கிய தரவுகளை தடுக்கக்கூடிய வகையில் அதன் அனைத்துத் தகவல்களை ஊடுருவிய குற்றவாளிகள் முடக்கியுள்ளனர். மீண்டும் அந்த தரவுகளைப் பெற, கும்பல் பணம் கோரியுள்ளது.
இதில் பெரிய இடர்கொள்ளப்பட்டது என்னவெனில், அந்த நிறுவனத்திடம் கோரப்பட்ட தொகையை வழங்க இயலாமல் போனது. இதனால், KNP Logistics நிறுவனம் மூடப்பட, சுமார் 700 ஊழியர்கள் வேலை இழக்க நேர்ந்தது. சமீபத்தில், பிரிட்டனில் உள்ள பல நிறுவனங்கள் இத்தகைய சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த சம்பவம் சைபர் பாதுகாப்பு குறித்த முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
