பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியான பனோ பீபி மற்றும் அஹ்சான் உல்லா மீது நடந்த கொடூரமான ஆணவக்கொலை, தற்போது அந்த நாடு முழுவதும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், மே 2025ல் அவர்களை கடத்திச் செல்லப்பட்டனர். பின்னர் குவெட்டா நகர புறநகரில் அவர்களை நபர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் இருவரும் இடுப்பில் கட்டப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், துப்பாக்கியால் சுடப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பெண்ணின் சகோதரன் மற்றும் அந்த பகுதியின் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாயி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் சகோதரனின் புகாரின் அடிப்படையில் பழங்குடியினத் தலைவர் தான் இந்த கொலையை செய்ய நேரடி உத்தரவிட்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பெண்கள் மீது நடக்கும் ஆணவக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2024ஆம் ஆண்டில் மட்டும் 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்ட இந்த இளம் ஜோடியின் சம்பவம், அந்த நாட்டின் பழங்குடியினர் மரபுக்கேடுகள் மற்றும் சமூக நீதிக்கான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
