பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமாக இருப்பது கே.என்.பி லாஜிஸ்டிக் நிறுவனம். இந்த நிறுவனம் 158 ஆண்டுகள் பழமையானதாகும். இது சுமார் 500 லாரிகளை வைத்து நாடு முழுவதும் பொருள்களை கொண்டு செல்லும் சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது நிறுவன கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்த போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. அகிரா என்ற சைபர் கும்பல் இந்த கடவுச்சொல்லை மிகவும் எளிமையாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.

அதன் பிறகு அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கியது. இந்த தரவை நீங்கள் மீண்டும் அணுக வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தால் பணம் கொடுக்க முடியாததால், இறுதியில் மூடப்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த 700 ஊழியர்கள் வேலையை இழந்தனர். பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.