கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 11 மாணவர்கள் கொச்சிக்கு சென்றனர். அனைவரும் காரில் காலர் கோடு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. காரை ஓட்டிய இளைஞர் மற்றொரு வாகனத்தை முந்துவதற்காக வேகமாக சென்றதால் கார்நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியது. இதனால் சம்பவிடத்திலேயே மூன்று மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் காரில் இருந்த மற்ற சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காரின் உள்ளே இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மேலும் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால் எதிரே வந்த அரசு பஸ்ஸில் பயணித்த பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.