
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, மரியாதைக்குரிய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சினுடைய முதுபெரும் தோழர். அவருக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு கொடுத்தது. அதற்கு கொடுத்த 10 லட் சம் ரூபாயை திரும்ப பொதுப்பணிக்காக அவர் ஒப்படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தன்னலமற்ற ஒரு சுதந்திர போராட்ட வீரரை…. அவருக்கு இப்படி ஒரு கௌரவம் கொடுக்கணும் என்பதை ஆளுநரை மறுத்திருப்பது…. தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை புறக்கணிப்பதற்கு இதுவே ஒரு நேரடியான எடுத்துக்காட்டு.
CBSC பாட புத்தகத்தில் கோட்டையை சேர்ந்த CMS கல்லூரியினுடைய வரலாற்று துறை பேராசிரியர் ஐசக். அவர் தான் NCERT பொறுப்பில் இருக்கிறார். அவர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். அதாவது NCERT தேசிய பாடத்திட்டத்தில் இந்தியா என்ற பெயரை மாற்றி விட்டு, பாரத் என்ற பெயர்களை கொடுக்க வேண்டும். அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள் என்றால்,
7000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான விஷ்ணு புராணம் என்ற புராணத்தின் பாரத் என்கின்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆச்சி இயந்திரமும் கிடையாது, ஒன்றும் கிடையாது. ஆனால் அதில் சொல்லப்பட்ட ஒரு கருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பாரத் என்ற பெயரை சேர்க்க வேண்டும் என்று அந்த ஐசக் தலைமையில் இருக்கின்ற குழு முடிவு பண்ணி இருக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு போன பொழுது,
அப்போது இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி, பாரத், இந்தியா இந்த இரண்டு பெயருமே இருக்கிறது. ஆனால் இப்ப இருக்குற மாதிரியே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.பெயர் மாற்றம் என்பது தேவையில்லை என்று 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இப்போ போய் பாரத் என்கின்ற மாற்றுவது அவசியம் இல்லாதது. இது எதை காட்டுகிறது என்றால், இந்தியா என்ற பெயரை பார்த்து மத்திய அரசு… ஒன்றிய அரசு பயந்து இருக்கிறது என்பது தான் இதில் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய உண்மை எனதெரிவித்தார் .