நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால் மூடியது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரைப் பந்தயம் மைதானம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறை பனி காணப்படுகிறது.

இதனால் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் விவசாயிகளும், தொழிலாளர்களும், சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும், நீர்நிலைப் பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. கடுமையான குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.