தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கி இருந்தார். நடிகர் தனுஷ் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் ஆவார். தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரிராஜா தயாரித்த ஒரு படம் தோல்வி அடைந்ததால் மீண்டும் சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். அப்போது செல்வராகவன் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். ஒரு படத்தை மட்டும் நான் இயக்குகிறேன் என்று கூறியுள்ளார். அந்த படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படத்தின் மூலம் தனுஷ் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு காதல் கொண்டேன் மற்றும் புதுக்கோட்டை போன்ற படங்களை செல்வராகவன் இயக்க  தனுஷ் நடித்தார். இந்த 3 படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த 3 படங்களில் வெற்றிக்கும்‌ யுவனின் இசையும் ஒரு காரணம். மேலும் நடிகர் தனுஷ் ஒரு பேட்டியில்  தன் குடும்பம் இந்த நிலைமைக்கு வருவதற்கு யுவன் சங்கர் ராஜா தான் என்று கூறியுள்ளார். தகனுஷின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.