இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகனின் முன்னாள் காதலி என்று கூறப்படும் அந்தப் பெண், பாரம்பரிய முறைப்படி மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார்.
இந்தோனேசியக் கலாச்சாரப்படி இது கணவன்-மனைவி அல்லது பெரியவர்களுக்குச் செய்யும் ஒரு மரியாதைக்குரிய செயலாகும். தன் கண் முன்னே முன்னாள் காதலி தன் கணவனுக்கு இப்படிச் செய்ய முயன்றதைப் பார்த்த மணமகள், ஒரு விநாடி கூட தாமதிக்காமல் ஆவேசமாக அந்தப் பெண்ணின் கையைத் தட்டிவிட்டு, அவரை அங்கிருந்து இழுத்துத் தள்ளினார்.
🚨⚡️During a wedding in Indonesia, the groom’s ex-girlfriend went up to the podium during the photo session and tried to kiss his hand in front of the bride.
The bride’s reaction was immediate. pic.twitter.com/1yo6RArbwO
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 26, 2025
இந்தத் தர்மசங்கடமான சூழலில் மணமகன் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில், மணமகளின் அதிரடி நடவடிக்கை இணையத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளது.
“இதுதான் சரியான பதிலடி, அந்தப் பெண்ணுக்கு இது தேவைதான்” என நெட்டிசன்கள் மணமகளின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், தன் முன்னாள் காதலி கையை முத்தமிட வந்தபோது மணமகன் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறித்தும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
“என் கணவன் எனக்கு மட்டுமே சொந்தம்” என்பதை மணமகள் உலகுக்கு உரக்கச் சொன்ன இந்த ‘பகீர்’ வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
