தாவரங்கள் அவற்றின் இலைகளில் உள்ள நுண்துளைகள் வழியாகச் சுவாசிக்கும் அரிய நிகழ்வை அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன்முறையாக வீடியோவாகப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். இதற்காக சுமார் ஐந்து ஆண்டுகள் உழைத்து ஸ்டோமாட்டா இன்-சைட் என்ற புதிய கருவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

அதிநவீன லேசர் நுண்ணோக்கி மற்றும் இயந்திர கற்றல் மென்பொருள் உதவியுடன் செயல்படும் இந்தக் கருவி, தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில் நீராவிப்போக்கு மூலம் நீரை வெளியேற்றும்போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

இதுவரை நேரில் காண முடியாத இந்த நுணுக்கமான செயல்பாட்டைத் துல்லியமாகப் படம்பிடித்திருப்பது, வருங்காலத்தில் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களை உருவாக்கப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.