சீனா விரைவான முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் வசதியான அமைப்புகளுக்குப் பெயர் பெற்றது. அண்மையில், ஒரு அமெரிக்கர், சீனாவில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்தும் முறை மற்றும் முற்றிலும் பணமில்லா சமூக முறைமை பற்றிய தமது அனுபவத்தைப் பகிர்ந்த காணொளி ஒன்று பரவி வருகிறது.
இந்தக் காணொளியில், வாகனம் நிறுத்தும் இடத்தில் பாரம்பரியமான மீட்டர்கள் இல்லாமல், வாகன ஓட்டிகள் தங்கள் கைபேசியைக் கொண்டு அந்தந்த இடத்தில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாகக் கட்டணம் செலுத்துவதைக் காண்பிக்கிறார்.
View this post on Instagram
மேலும், நேரம் முடிந்த பிறகு பணம் செலுத்தாமல் வெளியேறாமல் இருக்க, தரையில் இருக்கும் சிறிய கருவி ஒன்று மேலே எழும்பி, வாகனத்தைத் தடுக்கும் முறையையும் அவர் விளக்கினார். அதேபோல், அங்குப் பெரும்பாலான வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவதால், சாலைகளில் சத்தம் மிகக் குறைவாகவே கேட்கிறது என்றும், சில நாட்களில் இரண்டே பெட்ரோல் நிலையங்களைத்தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
உணவகங்களில் மேசையில் உள்ள குறியீட்டைச் ஸ்கேன் செய்து ஆர்டர் செய்வது முதல் பில் செலுத்துவது வரை அனைத்தும் எண்ணியல் முறையில் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, சீனாவின் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதாக அவர் வியந்துள்ளார்.
